2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விரைவில் திறக்கப்படும் பாடசாலைகள்?

Freelancer   / 2021 செப்டெம்பர் 04 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதை தாமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வைத்திய பீட நோயெதிர்ப்பு பிரிவு பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவிக்கின்றார்.

பெரும்பாலான மேற்குலக நாடுகளில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிக்கின்ற போதிலும், பாடசாலைகள் திறக்கப்பட்டன.

எனினும், இலங்கை உள்ளிட்ட 23 நாடுகள் மாத்திரமே, மே மாதம் முதல் பாடசாலைகளை மூடியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

யுனிசெப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஹென்ரிடா போ மற்றும் யுனேஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒடி அசோலே ஆகியோரை மேற்கோள்காட்டி அவர் இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை, அடுத்த ஜனவரி வரை குழந்தைகளை வீட்டில் வைத்திருக்க பெற்றோர்கள் ஒப்புக்கொள்வார்களா என்றும் நீலிகா கேள்வி எழுப்பினர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X