2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிளிநொச்சிக்கான பதிலே லொஹானுக்கு கிடைத்திருக்கும்: ஸ்ரீதரன் விளக்கம்

Editorial   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ரயில் நிலையத்தில் நின்றிருந்தவர்கள் மீது, இராணுவச் சிப்பாய் ஒருவர் 1985ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். அதில் 10 பேர் மரணித்தனர் என ஞாபகமூட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், அச்சம்பவம் தொடர்பில் விசாரணைக்குப் பின்னர் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்தனர்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையும் அவரது சகாக்களும், துப்பாக்கியை காண்பித்து தமிழ் அரசியல் கைதிகளை முழந்தாளிடச் செய்து அச்சுறுத்தியிருந்தார். தங்களுடைய சப்பாத்துக்களை நக்கி சுத்தம் செய்யுமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

துப்பாக்கி அல்லது வெடிப்பொருள்களை சாதாரண ஒருவர் வைத்திருந்து கைது செய்யப்பட்டிருந்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்  ஆனால், லொஹான் ரத்வத்தையின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்திருந்தால், அதில் தமிழ்க் கைதிகள் மரணித்திருப்பார்களாயின், லொஹான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறியிப்பார்கள்.

லொஹானின் இராஜினாமா வெறும் கண்துடைப்பு, ஆகையால் அவரிடமிருக்கும் சகல பதவிகளையும் அபகரித்து, அவரை கைது செய்து விசாரணை செய்யுமாறும் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிதிச்சட்டமூலம் தொடர்பிலான விவாதத்தில் கலந்​துகொண்டு உரையாற்றிக் கொண்டிருக்கின்றார். அவர். தனதுரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X