2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஐயப்பன் பக்தர்களுக்கு நவம்பர் முதல் விசா

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து செல்லும் ஐயப்பன் பக்தர்களுக்கு நவம்பர் மாதம் முதல்  விசா வழங்குவற்கான  ஏற்பாடுகள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஐயப்பன் யாத்திரை மேற்கொள்ளவதில் உள்ள சவால்கள் குறித்து இந்து கலாசார திணைக்களத்தில் பிரதமரின் இணைப்பு செயலாளர்  செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஷ்வரன், பிரதமரின் ஆன்மீக இணைப்பாளர் பாபு சர்மா ,அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தானத்தின் செயலாளர் கணேஷமூர்த்தி, சபரிமலை ஒன்றிய குருக்கள் கே.ரவீந்திர குருசாமி மற்றும் ஐயப்ப குருசங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக்
கொண்டனர்.

இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்காக விசா வழங்கும் நடைமுறை தற்போது  நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் விசா வழங்குவதற்கான விசேட நடவடிக்கை எடுக்குமாறு செந்தில் தொண்டமானிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக இந்திய உதவி  உயர்ஸ்தானிகளை தொடர்பு கொண்டு, விசா வழங்குவதற்கான தேவையான நடவடிக்கை எடுக்குமாறு  கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் முதல்  விசா வழங்குவற்கான  ஏற்பாடுகள் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கேரளா மாநிலத்திற்கு விமான சேவை இயங்காத சூழ்நிலையில் சபரிமலை செல்வதற்கு  தமிழகம் ஊடாக  வெகுதூரம் சாலைவழியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் மீண்டும் விமான சேவை ஆரம்பிப்பதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கொவிட் தொற்று கட்டுப்பாட்டில் இருக்கும் பட்சத்தில் கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தப்புரம் மற்றும் கொச்சின் ஆகிய இரண்டு விமானநிலையங்களுக்கும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கை
முன்னெடுக்கப்படும் என விமானத்துறை அமைச்சர், செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார் என செந்தில் தொண்டமானின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X