2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பயணத்தடை விவகாரம் குறித்து மற்றுமோர் அறிவிப்பு

Editorial   / 2021 ஜூலை 30 , பி.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மே மாதம் 11 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்து.

அந்தத் தடை மே மாதம் 30ஆம் திகதி வரை மட்டுமே அமுல்படுத்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கொ​ரோனா தொற்றின் வேகம் அதிகரித்தமையால், அந்தத் தடை நீடிக்கப்பட்டது.

எனினும், இதுதொடர்பில் கருத்துரைத்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, “பயணத்தடையை நீக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X