2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சபாநாயகரே விசாரிக்க வேண்டும்’

Nirosh   / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

அண்மையில் சபையில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்கள் தொடர்பில் குழு அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளாது, சபாநாயகரே நேரடியாக விசாரணைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (06) அமர்வில் சபாநாயகரின் அறிவிப்பை தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்கள் தொடர்பில் சபாநாயகர் குழு அமைத்து விசாரிப்பதாக கூறுகிறார். ஆனால், இதனை குழு அமைத்து விசாரிக்க வேண்டிய தேவை கிடையாது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சபைக்குள்ளும், சபைக்கு வெளியிலும் தாக்க முயற்சித்ததாகக் கூறி சபாநாயகருக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர் என்றார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றுக்காக பாராளுமன்றத்திலிருந்து வெளியில் செல்லும்போது மறைந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சபாநாயகர் சபைக்கு வரும் நுழைவாயில் வழியாக மறைந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனூடாக பாராளுமன்ற உறுப்பினருக்குப் பாதுகாப்பு இல்லை என்பதே வெளிப்படுகிறது என்றார். 

சபையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் பல குழுக்கள் அமைத்து விசாரிக்கப்பட்டன. எனினும் இந்த விசாரணைகளில் எந்தவிதமான இறுதித் தீர்மானங்களும் எட்டப்பட்டதில்லை. எனவே தற்போது இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தையும் குழு அமைத்து விசாரிப்பதனூடாக நியாயம் கிடைக்கப்போவதில்லை எனவும் கூறினார். 

பாராளுமன்றத்துக்கு வருவதற்கு எம்.பிகள் பயப்படுகிறார்கள். இவ்வாறான நிலையில் பாராளுமன்ற அமர்வுகளை எவ்வாறு நடத்திச் செல்ல முடியும். எம்.பிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பில் குழு அமைத்து விசாரிக்கத் தேவையில்லை. சபையில் கமராக்கள் இருக்கின்றன. சபாநாயகரால் இதனை நேரடியாக விசாரிக்க முடியும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .