2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஞானசாரரின் கூற்றை கண்டித்தார் சாணக்கியன்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 22 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி இஸ்லாமியர்களின் கடவுளான அல்லாஹ் என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான இராசமாணிக்கம் சாணக்கியன், ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம்களும், 20ஆவது திருத்தத்துக்கு கைகளைத் தூக்கியோரும் மௌனமாக இருக்கின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வமற்ற பேச்சாளராகவே ஞானசார தேரர் செயற்படுகின்றார் என்றார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஞானசாரதேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என்றார்.

இந்த நாட்டில் 500 அடிப்படைவாத கிறிஸ்தவ தேவாலயங்கள் இருப்பதாக தெரிவித்திருந்த ஞானசார தேரர், இஸ்லாமிய தலைவர்களை கைது செய்யுமாறும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி அல்லாஹ்தான் என்றும் தெரிவித்துள்ளார். அதனை நான் கண்டிக்கின்றேன்.

எனினும், ஆளும் தரப்பிலிருக்கும் முஸ்லிம்கள் மௌனமாகவே இருக்கின்றனர். எந்தநேரத்திலும் இலங்கையில் தாக்குதல்கள் நடத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். அப்படியாயின், சுற்றுலாத்துறையை எவ்வாறு மேம்படுத்த முடியும். வெளிநாடுகளிலிருந்து முதலீட்டாளர்கள் எப்படி நாட்டுக்கு வருவார்கள் என்றும் கேட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .