2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொறுப்புகள் ஹரீன், வடிவேலிடம் மீண்டும் ஒப்படைப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 18 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக ஹரின் பெர்னாண்டோவும்
பொதுச் செயலாளராக தானும் தொடர்ந்தும் செயல்பட முடியும் என, சிவில் மேன்முறையீட்டு
நீதிமன்றத்தினால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என, பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.


மலையக மக்களுக்காக, சேவை நோக்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை தேசிய
தோட்டத் தொழிலாளர் சங்கத்தினுடைய செயற்பாடுகளை இடை நிறுத்தும் நோக்குடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் ஆர். யோகராஜன் ஆகியோர் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இதற்கமைய, ஓகஸ்ட் மாதம் 16ஆம் திகதி அன்று மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, பத்து நாள்கள் தடையுத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர். அதனை ஆட்சேபித்து தம்மால்  தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சிவில் மேன்முறையீட்டு
நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, நேற்று முன்தினம் (16) தடைகள் எதுவும் இன்றி இலங்கை
தேசிய  தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நடவடிக்கைகளை, தொடர்ந்தும் தங்களால்
முன்னெடுக்க முடியும் உத்தரவிட்டுள்ளது.

இது ஒட்டுமொத்த பெருந்தோட்ட மலையக மக்களுக்கு கிடைக்கப்பெற்ற மாபெரும் வெற்றி என தெரிவித்த அவர், தொடர்ந்தும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு தொழில் நலனுக்காக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் செயற்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .