2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’தடுப்பூசி ஏற்றப்படும் மையங்கள் மட்டுப்படுத்தப்படும்’

Niroshini   / 2021 செப்டெம்பர் 21 , பி.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் தடுப்பூசிகள் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவ்ததார்.

அதனால், உடனடியாக, அருகில் தடுப்பூசி ஏற்றும் நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளுமாறு, அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இன்று (01) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.

எதிர்காலத்தில், வீடுகளுக்கு அருகில் சென்று தடுப்பூசி போடுவதற்குப் பதிலாக, ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக, அவர்; சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தடுப்பூசி போடத் தொடங்கப்பட்டு, ஒரு வருடம் ஆகிவிட்டது. 'பூஸ்டர்' தடுப்பூசி செலுத்தியோருக்கு தடுப்பூசியை கொடுக்க வேண்டியிருந்தால், எதிர்காலத்தில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

'எதிர்காலத்தில், நாம் இப்போது வீட்டை நெருங்குவதற்குப் பதிலாக ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போட முடியும். அதற்கு எவ்வளவு நேரத்தையும் முயற்சியையும் செலவழிக்க முடியும் என்று சொல்ல முடியாது: என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .