2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

ஒட்சிசன் தேவையுள்ள நோயாளிகள் அதிகரிப்பு

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வைத்தியசாலைகளில், ஒட்சிசன் தேவையுள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமான தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நிலைமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் திரிபான டெல்டா பரவிய பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டிய ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டார்.  

கடந்த காலத்தில் 100 நோயாளிகளில் ஐந்து பேர் ஒட்சிசனைச் சார்ந்திருந்தனர் எனக் கண்டறியப்பட்டதாகவும் இப்போது இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அடுத்த மாத இறுதிக்குள் தடுப்பூசி போடப்படும் என்று கூறிய அவர், மக்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதே தடுப்பூசி செலுத்துவதன் முக்கிய நோக்கம் என்றும் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .