2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

அரிசி விலை திடீரென அதிகரித்தது

Editorial   / 2022 ஜனவரி 09 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல நகரங்களில் அரிசி விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மாறுபட்ட விலைகளிலே​யே அரிசி விற்கப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் வெள்ளை பச்சை அரிசி 150 ரூபாயுக்கும் 160 ரூபாய்க்கும் இடையிலும் சிவப்பு பச்சை அரிசி 160 ரூபாய் முதல் 170க்கு இடையிலும் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாய் முதல் 180 ரூபாய்க்கு இடையிலும் விற்கப்படுகின்றது.

அரிசி விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளமையால் தாங்கள் பல்வேறான துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

அரிசி மட்டுமன்றி ஏனைய உணவுப் பொருட்களின் விலைகளும் இவ்வாறு அதிகரித்துள்ளன என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .