2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’அவர்களை வேலைக்கு அழைப்பது ஆபத்தானது’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சேவையில் இணைக்கப்பட்டுள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை வேலைக்கு அழைப்பது ஆபத்தானது என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக முனசிங்கவினால் கையொப்பமிடப்பட்டு, பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் சூழ்நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை வேலைக்கு அழைக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X