2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒமிக்ரோன் நுழையும் ஓட்டைகள் குறைப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்ஆபிரிக்காவில் இனங்காணப்பட்ட கொரோனா  வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு, விமான நிலையத்தின் மூலம் நுழையக்கூடிய ஓட்டைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு, நேற்று (02) தெரிவித்தது.

இலங்கைக்குள் நுழைந்து அழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளி ஒருவர் நாட்டுக்குள் நுழையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விமான நிலையங்களில் பலவிதமான பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும், இந்த மாறுபாடானது ஏற்கெனவே நாட்டுக்குள் ஊடுருவியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

பயணிகளின் பீசிஆர் அறிக்கை எதிர்மறையாக இருந்தால் தவிர, பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட மாட்டார்கள் என்பதுடன், விமான நிலையத்தை வந்தடையும் பயணிகள் 72 மணி நேரத்துக்குள் பெறப்பட்ட எதிர்மறை பீசிஆர் அறிக்கையை எடுத்துச் செல்வது கட்டாயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் பீசிஆர் பரிசோதனை அறிக்கை எதிர்மறையாக இருக்கும் நபர்கள் மட்டுமே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற ஒவ்வொரு பயணிகளும் சிகிச்சை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மையத்துக்கு அனுப்பப்படுவார்கள் என்று விளக்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .