2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘புதிய சீன கொலனி’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

சிறிது காலத்துக்காக ஆட்சிக்கு வந்தவர்கள், இந்த நாட்டின் ஒரு பகுதியை வேறொரு நாட்டுக்கு சொந்தமாக வழங்க உரிமையற்றவர்கள் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா ராமன்யா மஹா நிக்காயவின் பிரதான சங்கத் தலைவர் ஓமல்பே சோபித தேரர், புதிய சீன கொலனியாக திட்டமிடப்பட்டுள்ள துறைமுக நகரை புதிய சீன பிராந்தியமாக மாற்றுவதற்கு, இந்த நாட்டின் சகல பிரஜைகளும் தமது முழு​மையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றார்.

எம்பிலிப்பிட்டிய நகரில் நேற்று (18) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து பெற்றுக்கொள்வதற்காக, பிரிவினைவாதிகள் 30 வருடங்களாகக் கொண்டு சென்ற போராட்டுத்தை வெற்றிகரமாக நிறைவு செய்​தமை அனைத்து இலங்கையர்களுக்குமான வெற்றியாகும் என்றார்.

அதேபோல் தற்போது அதேபோன்றதொரு  போராட்டத்தை நாம் சந்தித்து வருகிறோம். இது பிரிவினைவாதம் அல்லாத வேறொரு முறையில் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்ற எடுக்கும் முயற்சியை தடுக்கும் போராட்ட நிலைமைக்கு இன்று முகம் கொடுத்துள்ளோம் என்றார்.

இந்த துறைமுக நகரம் ஆரம்பிக்கப்பட்டமை மற்றும் அதன் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து பார்க்கும் போது, எமது நாட்டுக்குள் மற்றுமொரு பிராந்தியம் உருவாகவுள்ளமை தெளிவாகின்றது என்றார்.

நாட்டில் உள்ள சகல இடங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பு மக்கள் பிரதிநிதிகள் ஊடாக பாராளுமன்றத்துக்கு கிடைக்கின்றது. இதற்கமைய 1,115 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட துறைமுக நகரமானது இந்த நாட்டின் நிர்வாகத்தின் கீழ் அடங்கவில்லை.எனவே பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு இந்த விடயம் தெரியுமா? அப்படி தெரிந்திருந்தால், எமது நாட்டில் மற்றுமொரு நாடு உருவாகும் சாபத்துக்கும் உங்களுக்கும் இருக்கும் தொடர்பு என்னவென்று கேள்வி எழுப்பினார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X