2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிபொருள் இல்லை என்றால் நாட்டில் மின்தடை ஏற்படும்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 30 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

எரிபொருளைக் கொள்வனவு செய்ய முடியாது போனால், நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் எனத் தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியவில் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தின் நேற்றைய (29) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் உணவுப் பொருள் தட்டுபாடு போல, எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படும். கடந்த வெள்ளிக்கிழமை வரையில் அந்நிய செலாவணியாக நாட்டில் காணப்பட்ட டொலர்கள், தங்க நகைகளின் பெறுமதிகளை டொலர்களில் சர்வதேச நாணய நிதியத்துக்கு இலங்கை மத்திய வங்கி அனுப்பியிருக்கும்.

இந்தத் தகவல்களை சபாநாயகர் அல்லது இராஜாங்க அமைச்சர்கள் அந்த வங்கியிடமிருந்து பெற்று சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என ரணில் வலியுறுத்தினார். இதனை அடிப்படையாக வைத்தே, நாட்டின் எரிபொருள் நிலைமைகள் தொடர்பில் பேச முடியும். போதிய நிதி இல்லை என்றால் நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய முடியாது. எரிபொருளை இறக்குமதி செய்ய முடியவில்லை என்றால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படும் எனவும் எச்சரித்தார்.

இதன்போது குறுக்கீடு செய்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, நாட்டில் தற்போது மின்சார தடை இல்லை என்றார். நாட்டின் மின்சாரத் தடை ஏற்பட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு நெட்பிளிக்ஸ் பார்க்க முடியாது. ஆனால், தொழிற்சாலைகளை இயக்க முடியாது. இதனால் பொருளாதாரத்தை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும் என ரணில் கூறினார்.

இதேவேளை இதன்போது குறுக்கீடு செய்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் ஏற்பட்டிருக்கும் அந்நிய செலாவணி தட்டுப்பாட்டால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருந்தன என்றார்.

எனினும் இதனை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும், இதனால் எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டில் மின்சாரத் தடை ஏற்படுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் இல்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .