2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஷானி பிணை ஆனாலும் விளக்கமறியல்

Ilango Bharathy   / 2021 ஜூன் 17 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும்
உப-பொலிஸ் பரி​சோதகர் ஆகியோர், மேன்முறையீட்டு
நீதிமன்றத்தால் நேற்று (16) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.



25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான
இரண்டு சரீரப் பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தங்களுக்கு பிணை வழங்காமல், நிராகரித்து கம்பஹா மேல்
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஷானி அபேசேகர தாக்கல்
செய்திருந்த திருத்த மனுவை ஆராய்ந்ததன் பின்னரே,
மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்கண்டவாறு கட்டளையிட்டுள்ளது.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட
பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், போலியான
சாட்சிகளை தயார் செய்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஷானி
அபேசேகர மற்றும் சுகத் மெண்டிஸ் ஆகிய இருவரும் கைது
செய்யப்பட்டனர்.

அவ்விருவரம் கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிணை வழங்கப்பட்டமைக்கான ஆவணங்கள் கம்பஹா
நீதிமன்றத்தில் முன்வைக்காமையில், அவருடைய விளக்கமறியல்
நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X