2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1,000 ரூபாய் விவகாரம்; சபையில் இன்று விவாதம்

Editorial   / 2019 ஜனவரி 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அழகன் கனகராஜ்

 

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,மேற்படி விவகாரம் தொடர்பில், நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதமொன்று, இன்று (24) நடத்தப்படவுள்ளது.

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்த பல பேச்சுவார்த்தைகள், முதலாளிமார் சம்மேளத்துக்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்றன. எனினும், அதில் எந்தவோர் இணக்கப்பாடும் எட்டப்படவில்லை. ஆகையால், கூட்டொப்பந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை, இழுபறி நிலைமையிலேயே உள்ளது.

நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு, பல்வேறான சிவில் அமைப்புகள், அழுத்தம் கொடுக்கும் வகையிலான போராட்டங்கள், நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம், இன்று (24) இடம்பெறவுள்ளது. மேற்படி விவகாரம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நாடாளுமன்றத்தில் அண்மையில் முன்வைத்திருந்தார்.

அந்த பிரேரணையின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்து, அன்றைய தினம் உரையாற்றிய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகக் கொடுப்பது சாத்தியமில்லை என்றும் அவ்வாறு செய்தால், பெருந்தோட்டங்களை இழுத்து மூடவேண்டிய நிலைமை ஏற்படுமென்றும் தெரிவித்திருந்தார்.

அத்துடன், ஏனைய கொடுப்பனவுகள் அடங்களாக, 1,000 ரூபாயை நாளொன்றுக்கு வழங்குவதற்கு, பெருந்தோட்ட நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன என்றும் பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X