2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

2 ஈரானியர்கள் மரணம்; 23இல் பிரேத பரிசோதனை

Freelancer   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைகளைத் தொற்று நீக்கும் திரவத்தை (ஹேன்ட் சனிடைஸர்) அருந்தியதால் உயிரிழந்த இரண்டு ஈரானிய கைதிகளின் பிரேத பரிசோதனை, ஒக்டோபர் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு ஈரானியர்களின் சடலங்களும், ஒரு வாரத்துக்குள் அவர்களின் உறவினர்கள் வரும் வரை பாதுகாப்பாக வைக்கப்படும் என்று ஈரான் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் நேற்று தெரிவித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் பிரேத பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் கடத்திய சந்தேகத்தின் பேரில் கொழும்பு விளக்கமறியல் சிறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ஈரானிய கைதிகள், கடந்த வியாழக்கிழமை சனிடைஸரை அருந்தியதால் உயிரிழந்தனர்.

ஒரு கைதியின் சடலம் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையிலும், மற்ற கைதியின் சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிணவறையிலும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X