2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

60 வயதுக்கு மேல் 1 இலட்சம் பேர் ஏற்றிக்கொள்ளவில்லை

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றொழிப்புக்கான தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர், இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

தடுப்பூசியேற்றும் நடவடிக்கை தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி, சிலர் கொவிட் தடுப்பூசியை நிராகரிப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதுவரை தடுப்பூசி பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்அதிகளவானோர் யாழ். மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 21,000 இற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை. கொழும்பு மாவட்டத்தில் 3,900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7,000
பேரும் இதுவரை கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என உள்நாட்டலுவல்கள் அமைச்சின்
தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .