2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

12-18 வயதுக்கு இடைப்பட்ட சகலருக்கும் விரைவில் தடுப்பூசி

Editorial   / 2021 செப்டெம்பர் 09 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

12-18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒன்றரை வருடங்களாக பாடசாலைகள் முடக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டுமாயின், மேலே குறிப்பிட்ட 12-18 வயதுகளுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசியை ஏற்றவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் என சுகாதார அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாயின் தரம்-7 முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றமுடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை நிர்வாகத்தினருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. மாணவர்களுக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு நிறைவடைந்து விட்டால் பாடசாலைகளை விரைவாக திறக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனூடாக 20 இலட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும். 20-29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது தடுப்பூசியை 34 சதவீதமானோரும் இரண்டாவது தடுப்பூசியை 12 சதவீதமா​னோரும் இதுவரையிலும் பெற்றுக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .