2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் செம்புவத்த ஏரி

Editorial   / 2017 செப்டெம்பர் 20 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் காணப்படும் செம்புவத்த ஏரி, சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் ஓர் இடமாக அமைந்துள்ளது.

இந்த ஏரி மாத்தளை, எல்கடுவ தேயிலைத் தோட்டத்தின் மலை உச்சியில் அமைந்துள்ளது. முதலில் ஏரிக்குள் நுழையும் போது அங்குள்ள தேயிலைச் தொழிற்சாலையின் நுழைவுச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், இந்த ஏரி ஆழமாக இருப்பதன் காரணமாக, ஒருசில பகுதிகளில் நீராடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், செயற்கை நீர்த் தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வெடுக்கச் சிறிய குடில்கள் ஏரியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளதுடன், பல கடைகளும் காணப்படுகின்றன.

குறித்த ஏரியைப் பார்வையிடுவதற்கு, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மாத்திரமின்றி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .