2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உரோமங்களை அகற்றுவதில் சிக்கலா?

Editorial   / 2018 டிசெம்பர் 28 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களது அழகில் அதிக அக்கறையுடைய பெண்கள், முகம், கைகள், கால்கள் என்பன மிருதுவான தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பர். இந்த அவயவங்களில், தேவையற்று வளர்ந்துள்ள உரோமங்களை, அகற்றவும் முற்படுவர்.   

உரோமங்களை அகற்றுவதற்காக, வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சவரக்கத்தி, லேசர் முடி அகற்றுதல் மற்றும் மொய்ஸரைஸ் க்ரீம்களை உபயோகிக்கின்றனர். இவற்றைப் பயன்படுத்தும் போது, பலருக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு விடுகிறது.   

இதனால், உடற்பாகங்களின் அழகும் கெட்டுவிடுகிறது. இத்தகைய பிரச்சினைகளிலிருந்து நீங்குவதற்கும் பணத்தை மீதப்படுத்துவதற்கும் சமயலறையிலுள்ள பொருட்களையே நாம் பயன்படுத்தலாம்.   

சமயலறையிலுள்ள பொருட்களைப் பயன்படுத்தி, உரோமங்களை அகற்றும் “பெக்”கை எவ்வாறு தயாரிக்கலாம்.   

சீனி மற்றும் தேசிக்காய் கலவை

சீனி மற்றும் தேசிக்காய்ச் சாறு கலந்த கலவையைப் பயன்படுத்தி, உரோமங்களை மிக இலகுவாக அகற்றலாம்.   
ஒரு மேசைக்கரண்டி சீனி மற்றும் தேசிக்காய் சாற்றை நன்கு கலவை செய்யவும். 8-9 மேசைக்கரண்டி நீர் ஊற்றி, அவற்றை குமிழ்கள் வரும்வரை சூடாக்கவும். அதன் பின்னர், அந்தக் கலவையை உரோமங்களுள்ள பகுதிகளில். பூசவும். 20-25 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவவும்.   

சீனி, தேன் மற்றும் தேசிக்காய் கலவை

சீனி, தேன் மற்றும் தேசிக்காய்க் கலவையினூடாக, உரோமங்களை மிக இலகுவாக அகற்றிக்கொள்ள முடியும்.   
இரண்டு மேசைக்கரண்டி சீனி, தேன் மற்றும் தேசிக்காய் சாற்றை நன்கு கலக்கவும். அந்தக் கலவையை, மூன்று நிமிடங்கள் வரை சூடாக்கவும். பின்னர் கலவை நன்கு தடிப்பாகும் வகையில் சிறதளவு நீரை ஊற்றவும்.  கலவை நன்கு குளிர்ந்ததன் பின்னர், உரோமங்கள் உள்ள பகுதிகளில் பூசவும். பூசிய பகுதிகளில் வெக்சிங் ஸ்டிரிப் அல்லது பருத்தியைக் கொண்டு, உரோமங்களைப் பிடுங்கி எடுக்கவும்.   

தேன் கலவை, ஒருவகை மொய்சரைசிங் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வரண்ட சருமங்களை உடையவர்களுக்கு, தேன் கலவை பெக்கே பரிந்துரைக்கப்படுகிறது.   

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ  கலவை

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழக் கலவை செய்வது மிகவும் எளிதானது. இரண்டு மேசைக்கரண்டி ஓட்ஸ் மற்றும் வாழைப்பழத்தை நன்கு கலவை செய்யவும். இந்தக் கலவையை, உரோமங்களுள்ள பகுதிகளில் பாவிக்கவும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்ததன் பின்னர், குளிர்ந்த நீரினால் கழுவவும். ஓட்ஸ் கலவையானது, மிக உயர்ந்த ஸ்கரப் என்பதுடன், தோல்களிலுள்ள சிவப்பு நிறப் புள்ளிகளை அகற்றவும் உதவுகிறது. முகத்திலுள்ள உரோமங்களையும் அகற்றிக்கொள்ள முடியுமென்பதுடன், இந்தக் கலவை, பளிச்சிடும் தோலைப் பெறுவதற்கும் உதவுகிறது.   

கிழங்கு மற்றும் பயறு கலவை

கிழங்கை சாறு பிளிந்து எடுத்துக்கொள்ளவும். இரவு ஊற வைக்கப்பட்ட பயறை அரைத்து எடுத்துக்கொள்ளவும். அரைத்து எடுத்த பயறுடன், கிழங்குச் சாறையும் கலந்து நன்கு கலவை செய்யவும். பின்னர், அந்தக் கலவையில் ஒரு மேசைக்கரண்டி தேன், ஐந்து மேசைக்கரண்டி தேசிக்காய் சாறையும் சேர்த்து, மீண்டும் கலவை செய்துகொள்ளவும். அந்தக் கலவையை உரோமங்கள் உள்ள பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் காயவிடவும். 20 நிமிடங்களின் பின்னர், குளிர்ந்த நீரில் கழுவவும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X