2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொழும்பு தேசிய நூதனசாலை

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிற்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயமாகப் பார்வையிடும் இடங்களில் கொழும்பு தேசிய நூதனசாலையும் ஒன்றாகும். இதுவே இலங்கையின் மிகப் பெரிய நூதனசாலையாக விளங்குகின்றது. இலங்கையின் வரலாற்றை அறிந்துகொள்வதற்கும் ஏற்ற ஒரு இடமாக இந்நூதனசாலை திகழ்கின்றது.

இது 1877 ஆம் ஆண்டு கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டது. இலங்கையின் பண்டைய கால வரலாறுகள் மற்றும் ஆதிகால கலை, கலாசாரங்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஒரு வாய்ப்பினையும் இங்கு பெற்றுகொள்ள முடியும்.

மிகப்பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்நூதனசாலையின் உள்ளே நுழைகையில், ஒவ்வொரு விசாலமான காட்சியறை மண்டபங்களிலும் உள்ள பழம் பொருட்கள், இலங்கையின் வரலாற்றை ஒரு நிமிடம் நம் கண் முன்னே கொண்டு வரும் வகையில் ஒழுங்​கமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூதனசாலையின் பிரம்மாண்ட தோற்ற அமைப்பே, பார்வையாளர்களை ​அடிக்கடி இங்கு வருகைத்தர வைக்கும் என்றால் மிகையாகாது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .