2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நீண்ட கூந்தலை எவ்வாறு பராமரிக்கலாம்?

Editorial   / 2018 டிசெம்பர் 29 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீளமான கூந்தல் என்பது, இன்றைய நாகரீகக் காலத்திலும் பல பெண்களின் கனவாகவே இருந்து வருகின்றது. ஆரம்பத்தில், சாதாரண சீயக்காய் பொடியையும் சவர்க்காரத்தையும் மாத்திரமே பயன்படுத்தி வந்த பெண்கள், தற்போது தொலைக்காட்சி, பேஸ்புக், டுவிட்டர், விளம்பரப் பதாதைதகள் என்று பல இடங்களில் காட்சிப்படுத்தப்படும் ஷெம்போக்கல், கன்டிஷனர்கள், எண்ணெய்கள் போன்றவற்றை, அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இருந்தும் என்ன பயன், முடி உதிர்வரும், அடர்த்தி இல்லாமல் போவதுமே மிஞ்சுகின்றது.

கூந்தலை நீளமாக வைத்துக்கொள்ள வேண்டுமெனில், கூந்தல் பராமரிப்பு அவசியம் என்பதுடன், கூந்தலைப் பராமரிக்க நேரத்தையும் ஒதுக்க வேண்டும்.

கூந்தலை சீவும் முறை

குளித்து முடித்தவுடன், பெண்கள் தலை சீவுவதைத் தவிர்க்கவேண்டும். குளித்த பின்னர், தலைமயிரின் வேர்கள், இலகுவாக இருக்கும் என்பதால், அவை சேதமடைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. தலைமுடியை, துவாய் மூலம், அழுத்தித் துடைக்காமல், நன்றாக உலர்ந்த பின்னர், சீப்பிலுள்ள பெரிய பற்கள் பகுதியைப் பயன்படுத்தி, தலையை சீவுவுதே சிறந்தது. இவ்வாறு பெரிய பற்கள் உள்ள சீப்பைப் பயன்படுத்துவதன் மூலம், கூந்தலில் ஏற்பட்டிருக்கும் சிக்குகளால் ஏற்படும் முடி உதிர்வை, தடுத்துக்கொள்ளலாம்.

ஷெம்போ பாவிப்பதைத் தவிருங்கள்

அதிகமான பெண்கள், தலைமுடி மிகுந்த வாசனையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக, அதிக அளவிலான ஷெம்போவைக் கையில் எடுத்து ​தலையில் வைத்துக் குளிக்கின்றனர்.

அதிகளவு ஷெம்போ பயன்படுத்துவதனூடாக, கூந்ததில் இயற்கையாகவே இருக்கும் எண்ணெய்த் தன்மையை இல்லாமல் போகிறது என்பதோடு, இயற்கையாக உள்ள கூந்தலின் அழகுத்தன்மை இல்லாமல் சென்றுவிடும். இவ்வாறு, அதிக சேதமடைந்த கூந்தலையுடை பெண்கள், வாரத்தில் மூன்று நாள்களுக்கு மட்டும் ஷெம்போ பயன்படுத்தி, தலை குழியுங்கள்.

கன்டிஷனர் பயன்படுத்துவது அவசியம்

கூந்தல் நிபுணர்கள், பெண்கள் நிச்சயமாக கன்டிஷனர்கள் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். கன்டிஷனர்களைப் பயன்படுத்தும் போது, எப்போதும் முடியின் நுனியையே கவனத்தில் கொண்டு வைக்கவேண்டும். அப்போதுதான், முழு கூந்தலும் மென்மையாகவும் சிக்குகள் இல்லாமலும் காணப்படும்.
முடியை வெட்டி வளருங்கள்

அதிகமான பெண்கள், தங்களது முடியை, சிறிதளவேனும் வெட்டுவதற்கு அஞ்சுவர். ஆனால், தலைமுடியை, வெட்டி வெட்டி பராமரித்தால் மாத்திரமே, நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறமுடியும். முடிந்தளவு, சிறிதளவேனும் அடிக்கடி முடியை வெட்டி வளருங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X