2024 மார்ச் 28, வியாழக்கிழமை

உலக முடிவு

Editorial   / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தில் ஹோர்டன் பிளேன்ஸின் முடிவுடன், ஆரம்பமாகுவதே உலக முடிவு ஆகும். சுமார் 4000 அடி உயரம் கொண்ட இப்பகுதி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிற ஓரிடமாக விளங்குகிறது. 4 கிலோமீற்றர் உள்ளே செல்லும் பொழுது இடையில் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சியினை காணக்கூடிய வாய்ப்பும் கிட்டும்.

காலை வேளையில் இங்கு செல்கையில், வெள்ளை நிற மேகக்கூட்டங்கள் நம்மை சூழ்ந்திருப்பதை கண்டு இரசிக்கலாம். மேலும் அடிக்கடி நிகழும் வானிலை மாற்றத்தினையும் காணமுடியும். பனி படர்ந்து இருக்கும் சமயத்தில் திடீரென வெயில் அடிப்பதும் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து மழை பொழிவதையும் அனுபவிக்கும் வாய்ப்பும் கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

மலையின் உச்சியிலிருந்து கீழே நோக்கும் பொழுது வெறும் அதளபாதாளம் மட்டுமே நம் கண்களுக்கு புலப்படும். ஒருவித அற்புத காட்சியாக விளங்குவதனாலேயே இதனை 'உலக முடிவு' என்று அழைக்கின்றனர். இலங்கையில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள உலக முடிவும் ஒன்றாகும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X