2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1,000 கிலோகிராமில் ’Beans Salad’

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரம் கிலோகிராம் நிறையுடைய பருப்பு வகைகளைக் கொண்டு, உலகின் மிகப் பெரிய 'பீன்ஸ் சாலட்' செய்து, இந்தியாவின் - மதுரை சமையல் கலைஞர்கள், கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

ஏறக்குறைய 9 வகையான பருப்பு வகைகளைக் கொண்டு, ஆயிரம் கிலோகிராமுக்கும் அதிகமான, உலகின் மிகப் பெரிய 'பீன்ஸ் சாலட்' செய்த மதுரையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு சேம்பர் அறக்கட்டளையின் சார்பாக, மதுரை வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஐடா ஸ்கட்டர் அரங்கில், 'வைப்ரண்ட் தமிழ்நாடு 2018' எனும் தலைப்பில், உணவு நிறுவனங்களின் கண்காட்சியொன்று, கடந்த 12ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே, சமையல் கலைஞர் ராஜ்மோகன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் அடங்கிய குழு, உலக சாதனை முயற்சியாக உலகின் மிகப் பெரிய 'பீன்ஸ் சாலட்'-ஐ சமைத்தனர்.

கொள்ளு, தட்டாம்பயறு, சுண்டல், மொச்சை, பாசிப்பயறு, பட்டாணி, நிலக்கடலை என 9 பயறு வகைகளும் முட்டைக்கோஸ், பீட்ரூட், கெரட் உள்ளிட்ட 300 கிலோகிராம் காய்கறிகள் என 1121.6 கிலோகிராமைச் சமைத்துச் சாதனை படைத்தனர். சமையல் கலைஞர்கள் உட்பட சமையல் கலை பயிலும் மாணவர்கள் 50 பேர், இச்சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .