2024 மார்ச் 28, வியாழக்கிழமை

குண்டெறிதலில் அய்மனுக்கு தங்கப் பதக்கம்

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

35ஆவது அகில  இலங்கை  பாடசாலைகள்  மெய்வல்லுநர் போட்டிகளின்  மூன்றாம்  நாளான  கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றது.  இதில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி   பங்குகொண்ட  வாழைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலய மாணவன்  ஏ.ஆர்.ஏ அய்மன், ஆண்களுக்கான குண்டெறிதலில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

 அண்மைக்காலமாக தேசிய மட்டக் கனிஷ்ட போட்டிகளில் பங்குபற்றி வரும் கிண்ணியா மத்திய கல்லூரியைச் சேர்ந்த எச்.எம் ரிஹான், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.  

மேலும் இதற்கு முன்னர்,கடந்த 2017ஆம் ஆண்டு மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த நவீன் விஸ்வஜித்தினால் நிலைநாட்டப்பட்ட (13.55 மீற்றர்) சாதனையை சுமார் 2 வருடங்களுக்குப் பிறகு அய்மன் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வாழைச்சேனை அந்–நூர் மகா வித்தியாலயம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் பெற்றுக்கொண்ட முதலாவது பதக்கமும் இதுவாகும்.இம்முறை நடைபெற்ற கிழக்கு மாகாணப்  பாடசாலை மட்டப் போட்டிகளில் பங்குகொண்டு 11.90 மீற்றர் தூரத்தில் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்ற அய்மன், மட்டக்களப்பு வலயத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X