2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன்

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பைனா விளையாட்டுக் கழகம் நடத்திய மின்னொளியிலான  அணிக்கு 8 பேர் கொண்ட 5 ஓவர் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டது.
 அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற இச்சுற்றுப்போட்டியில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 64 கிரிக்கெட் அணிகள்  பங்குபற்றின. இதில் இறுதிப்போட்டிக்கு அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணியும், அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ரஹிமிய்யா அணியியும் தெரிவு செய்யப்பட்டு விளையாடினர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஏ.ஸி.ஸி அணியினர் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தனர். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ரஹிமிய்யா அணியினர் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர். இதில் ரஹிமிய்யா அணியின் சார்பில் மசூத் 25 ஓட்டங்களையும், ஹஸ்லி 21 ஓட்டங்களையும், றிஸ்னி 18 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். ஏ.ஸி.ஸி அணியின் சார்பில் பந்துவீச்சில் 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

வெற்றி பெறுவதற்கு 67 ஓட்டங்களைப்பெற பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஏ.ஸி.ஸி  அணியினர் 4.2 பந்துவீச்சு ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 67 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர். இதில் ஏ.ஸி.ஸி அணியின் சார்பில் அஸ்லம் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் அடங்கும்.

வெற்றி பெற்ற அக்கரைப்பற்று ஏ.ஸி.ஸி அணினருக்கு பைனா வெற்றிக்கிண்ணமும் 35,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. இரண்டாமிடத்தைப் பெற்ற அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு ரஹிமிய்யா அணியினருக்கு ரன்னர்அப் கிண்ணமும் 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டன.

இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஏ.ஸி.ஸி அணியின் அஸ்லமும்,தொடரின் சிறப்பாட்டக்காரராக ரஹிமிய்யா அணியின் மசூதும் தெரிவு செய்யப்பட்டு கிண்ணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பைனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எம்.என்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்ற இறுதிப்போட்டி நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் வெற்றி பெற்ற அணிகளுக்குரிய கிண்ணங்களையும், பணப்பரிசில்களையும் வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .