2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீபிகாவுக்கு தங்கப்பதக்கம்

Editorial   / 2019 நவம்பர் 06 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 35 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளின் நான்காவது நாளன்று 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மஹஜனா கல்லூரியின் சி. தீபிகா புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேநேரம், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசுதல் போட்டியில் பங்குகொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் எஸ். மிதுன்ராஜ் முந்தைய போட்டிச் சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதன்படி  வட மாகாணத்துக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று வெற்றியீட்டினர்.

 இதில் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவர்களான ஏ. புவிதரன் மற்றும் என். டக்சிதா ஆகிய இருவரும் புதிய போட்டிச் சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்ள, அளவெட்டி அருணோதயா கல்லூரியின் எஸ். திசாந்த், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார். தீபிகா, தனுசங்கவி அபாரம்

18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீராங்கனை சி. தீபிகா புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டி அந்தக் கல்லூரிக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை ஈட்டிக்கொடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .