2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விளையாட்டுத் திடலில் மின் குமிழ் பொருத்துமாறு வேண்டுகோள்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 27 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செ.தி. பெருமாள்

நல்லாட்சி அரசாங்கத்தின் அப்போதைய தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் புதிய கிராமங்கள் அப்போதைய அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரையில், அவரது அமைச்சின் வரவு செலவு திட்ட நிதியில் 70 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்து டிக்கோயா ட்ரஸ்ட் நிறுவனமூடாக மஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் விளையாட்டுத் திடலுக்கு சுற்றி உள்ள பகுதிக்கு கம்பி வலை இட்டு இரவு, பகல் வேளையில் விளையாட மின் குமிழ்கள் பொருத்தப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டது.

இருந்தபோதும் அத்திடலில் இரவு, பகல் வேளையில் மின் குமிழ்கள் இயக்க முடியாத வலு குறைந்த நிலையில் உள்ளதாக பிரதேச சபையின் செயலாளர் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் கணபதி நகுலேஸ்வரனிடம் கேட்டபோது, திடலை நாம் கையளிக்கையில் தம்மால் செப்பனிட்ட மின் குமிழ்கள் முறையாக இருந்தது எனவும் கடந்த சில ஆண்டுகளாக அவை பாவனைக்கு உள்ளாக்கவில்லை எனக் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மஸ்கெலியா மின்சார சபையின் பொறியியலாளர் தனுஹ, விளையாட்டுத் திடலில் பொருத்தப்பட்டுள்ள இணைப்பு சிங்கிள் பேஸ் எனவும் த்றீ பேஸ் மின் இணைப்பு தேவை என்பதால் அந்த இணைப்பை மாற்றம் செய்யும் பட்சத்தில் 24 மணி நேரமும் தொடர்ந்து பாவிக்கலாம் எனல் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட பிரதேச சபையின் செயலாளர் எஸ். ராஜவீரன் கருத்துத் தெரிவிக்கையில், தமது மஸ்கெலியா பிரதேச சபையின் விளையாட்டுத் திடலில் இரவு பகல் வேளையில் விளையாட மின் குமிழ் முறையாக இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மின் இணைப்பு இருக்கும் எனக் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X