2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

சிநேகபூர்வ போட்டியில் வென்ற போல்டன்

Shanmugan Murugavel   / 2021 டிசெம்பர் 29 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட அணிக்கும், போல்டன் கால்ப்பந்தாட்ட அணிக்குமிடையில் நடைபெற்ற சிநேகபூர்வமான கால்பந்தாட்டப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் போல்டன் வென்றது.

கொரோனா வைரஸ் நீண்ட கால விடுமுறைக்கு பின்னரான இப்போட்டியானது, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

போல்டன் சார்பாக, எம். துபைல், ஏ.எம். ரிஹ்சான் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, லிவர்பூல் சார்பாகப் பெற்ற கோலை எம்.எம். முப்தாஸ் பெற்றார்.

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக, எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஓ.எம். அசாம், எம்.எஸ்.எம். அஸ்பான் ஆகியோர் கடமையாற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .