2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கிரிக்கெட் சபை நடுவர்களின் விசேட சந்திப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 அ . அச்சுதன்  

Umpire Development & Panel of Mutur (UDPM) இன் அழைப்பினை ஏற்று இலங்கை  கிரிக்கெட் சபையின் (SLC) நடுவர்கள் நிருவாகக் குழு மற்றும் புள்ளிக் கணிப்புக் குழுவுக்குமி டையிலான வரலாற்றுச் சந்திப்பொன்று திங்கள் கிழமை (02) மூதூர் 3CD கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது மூதூரின் இலங்கை  கிரிக்கெட் சபை  தேசிய நடுவர் வை.எஸ்.எம்.ஸிஹான் தலைமையில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பில் இலங்கை  கிரிக்கெட் சபையின் நடுவர் நிருவாகத்தின் பொதுச்செயலாளர் வசந்தலால் பெர்ணான்டோ, நடுவர்களுக்கான விரிவுரை யாளரும் மற்றும் பயிற்றுவிப்பாளருமான டி.எச்.விஜேவர்தன, நடுவர்கள்

ஒருங்கிணைப்பாளர் அபு எம்.சித்திக், DLS புள்ளிக்கணிப்பீட்டு முகாமையாளர் அசேல சன்தருவான் மற்றும் புள்ளிக் கணிப்பீட்டு நிருவகத் தலைவர் சன்ஜய ஜயசிங்க , உறுப்பினர் ஜெகத்  பிரேமசந்ர  மற்றும் விரிவுரையாளர் ரங்கா சமந்த

இவர்களுடன் அண்மையில் மூதூரில் நடுவர் பரீட்சையில் சித்தியடைந்த இலங்கை நடுவர்கள் சங்கத்தின் (ACU - SL) நடுவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மேற்படி சந்திப்பில் மூதூர் மற்றும் திருகோணமலையின்  கிரிக்கெட் வளர்ச்சி தொடர்பாகவும், மூதூர் பிராந்தியத்தின் பாடசாலைகள் மற்றும் கழகங்களின் பயிற்றுவிப்பு தொடர்பாகவும், நடுவர்கள் அபிவிருத்தி, பயிற்சி மற்றும் எதிர் காலத்தில் நடுவர்களுக்கான பரீட்சை சம்பந்தமாகவும் முக்கியமாக ஆராயப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X