2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இறுதி 16 அணிகளுக்கான சுற்றில் பாடும்மீன்

Editorial   / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.யூ.எம். சனூன்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தால் நடாத்தப்பட்டு வரும் கால்பந்தாட்டச் சங்க (எப்.ஏ) கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டிக்கு யாழ்ப்பாணம் குருநகர் பாடும்மீன் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றுள்ளது.

கொழும்பு பெத்தக்கன விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற தமது இறுதி 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் பெனால்டி மூலம் புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்டக் கழகத்தை வென்றே இறுதி 16 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிக்கு பாடும்மீன் விளையாட்டுக் கழகம் தகுதிபெற்றிருந்தது.

இப்போட்டி ஆரம்பித்த நேரத்திலிருந்து இறுதி நிமிடம் வரைக்கும் விறுவிறுப்பான போட்டியாக அமைந்திருந்தது. முதற்பாதியின் 30ஆவது நிமிடத்தில் பாடும்மீனின் கெய்ன்ஸ் செலுத்திய உதையானது லிவர்பூல் வீரரால் தடுக்கப்பட்ட நிலையில் அது ஓவ்ண் கோலாக மாறிய நிலையில், முதற்பாதி முடிவில் பாடும்மீன் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் இரண்டு பக்கமும் பலத்த சவால் நிலவியது. கோல்களைச் செலுத்த இரண்டு அணியின் வீரர்களும் மும்முரமாக செயல்பட்டனர். இந்நிலையில் போட்டி நிறைவு பெறும் கடைசி நிமிடத்தில் லிவர்பூலின் எம். பாஸித் தனது அணிக்கான கோலைப் பெற்றார்.

 குறித்த கோலின் மூலம் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருக்க போட்டி சமநிலையில் நிறைவடைந்தால் வெற்றியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டிக்கு மத்தியஸ்தர் அழைப்பு விடுத்தார்.

பெனால்டியில், 4-3 என்ற ரீதியில் பாடும்மீன் வென்றிருந்தது. பாடும்மீன் சார்பாக, சாந்தன், கெய்ன்ஸ், விசோத், செயன் ஆகியோரும், லிவர்பூல் சார்பாக நப்லி, ரஸ்வான், ஷிபான் ஆகியோரும் பெனால்டிகளை உட்செலுத்தினர்.

இப்போட்டிக்கு மத்தியஸ்தர்களாக, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன மத்தியஸ்தர்களான புத்திக டயஸ், சமீர, குசன் இந்திக, எஸ். முருகன் ஆகியோர் கடமையாற்றினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X