2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு

Freelancer   / 2023 மார்ச் 29 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டடத்தில் புதிய  சட்ட நூலகம், சட்டத்தரணிகளின் பாவனைக்காக  இன்று (29) திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில்,  சட்டத்தரணிகளின் பாவனைக்காக சட்ட நூலகம் திறப்பு வைபவம் நடைபெற்றதுடன், பிரதம அதிதியாக கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயராம் ட்ரொக்ஸி கௌரவ அதிதிகளாக கல்முனை மாவட்ட நீதிபதி ஏ.எம் முஹம்மட் றியால், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

நிகழ்வின் முதலில் அதிதிகள் மாலை அணிவித்து  வரவேற்கப்பட்ட பின்னர் புதிய சட்ட நூலகம் அதிதிகளால் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.  

மத அனுஸ்டானம் இடம்பெற்றதை தொடர்ந்து  கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி 40 வருட காலத்தின் பின்னர் புதிய நூலக அமைக்கப்பட்ட  வரலாறு அதற்கான உதவிகள் குறித்து தலைமையுரை வழங்கி வைத்தார்.

சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரது பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற பெறுமதியான சட்டப்புத்தகங்கள் உத்தியோகபூர்வமாக புதிய சட்ட நூலகத்துக்கு வழங்கப்பட்டன.  (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .