2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து; ஒருவர் பலி

Freelancer   / 2022 ஜூன் 25 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி - ஹுன்னஸ்கிரிய வீதியில் பேருந்து ஒன்று மீமுரே பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

சுற்றுலா பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த 5 பேர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையிலும், மேலும் பலர் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மெதமஹனுவர பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .