2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை

Freelancer   / 2023 மார்ச் 17 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கும், ரஷ்யா யாகோவ்லேவ் சுவாஷ் மாநில கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) கைச்சாத்திடப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம், சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த அமைப்புக்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அவற்றை பயனுள்ளவகையில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.றியாட் ரூளியின் தலைமையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ரஷ்யா யாகோவ்லேவ் சுவாஷ் மாநில கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விளாடிமிர் நிகோலாவிச் லவனோவ், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் கற்றல், கற்பித்தல், ஆய்வு மற்றும் புத்தாக்கத் துறைகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்களும் பயனடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரஷ்யா மொழி கற்கை நெறியை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அத்துடன், ரஷ்யா பல்கலைக்கத்தால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு அபிவிருத்தி வேலைத் திட்டங்களையும் மற்றும் பாடவிதான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்கள், ஆய்வு மாநாடுகள், ஆய்வு வெளியீடுகள், விரிவுரையாளர்களுக்கு பயிற்சிகள் உள்ளிட்ட பல ஒன்றிணைந்த வேலைத் திட்டங்களை துரிதகதியில் நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .