2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொத்துவில் வைத்தியசாலையில் தோல் நோய் கிளினிக்

Editorial   / 2021 டிசெம்பர் 06 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தோல் நோய் சம்பந்தமான கிளினிக் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு முறை இக்கிளினிக்தை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், இதில் கலந்துகொண்டு சிகிச்சை பெற விரும்புவோர் வைத்தியசாலைக்கு சமூகமளித்து தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டுமென அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், இன்று (06) தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் மற்றும் அதனை அன்டிய பிரதேச மக்கள் தங்களது தோல் சம்மந்தமான நோய்களுக்கு தூரப் பிரதேச வைத்தியசாலைகளுக்கு சென்றே சிகிச்சைகளைப் பெற்று வந்தனர்.

“இதனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கினர். இவ்வாறான சந்தப்பத்தில் இப்பிராந்திய மக்களின் நலன் கருதி, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தோல் நோய்க் கிளினிக் சேவையை ஆரம்பித்துள்ளோம்.

“பொத்துவில், பானம, லகுகல, ஊரணி மற்றும் கோமாரி போன்ற பிரதேச மக்கள் இக்கிளினிக் சேவையினூடாக நன்மையடையவுள்ளனர்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X