2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குப்பையில் சிக்கிய முகவரிகளுக்கு சட்டம் பாய்கிறது

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதான வீதிகள், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் தொடர்ந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்தக் குப்பைகளில் இருந்து பெறப்பட்ட முகவரிகளை அடிப்படையாக கொண்டு, உரியவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்சத் காரியப்பர் தெரிவித்தார்.

குப்பைகளால் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியத்துக்குத் தீர்வு காணும் நோக்கில், கல்முனை மாநகர சபை மேயர் சட்டத்தரணி ஏ.எம்.  ரக்கிபின் ஆலோசனையின் பேரில், கள விஜயம் செய்த டொக்டர் அர்சத் காரியப்பர் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் இந்நடவடிக்கையை முன்னெடுத்தனர்.  

குப்பைகளிலிருந்து மின்சார சபை நிலுவைப் பட்டியல், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை நிலுவைப் பட்டியல், டெலிகொம் நிலுவைப் பட்டியல் உட்பட முகவரி அச்சிடப்பட்ட ஆவணங்களைக் கைப்பற்றினர்.

23 இடங்களில் இருந்து இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கல்முனையில் இருந்து 20 பேரின் முகவரியும், சாய்ந்தமருதில் இருந்து 23 பேரும், மருதமுனையில் இருந்து 18 பேரும், நற்பிட்டிமுனையில் இருந்து 17 பேருமாக

அந்த முகவரிகளை அடிப்படையாக கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளானர்.

அந்த 78  பேருக்கும் எதிராக பொதுமக்களுக்கு இடைஞ்சல் செய்தமைக்காக நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்த போவதாக பிரதம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .