2024 மார்ச் 28, வியாழக்கிழமை

‘போக்கிடம் இல்லாமல் அரசியலுக்கு வரவில்லை’

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்கிடம் இல்லாமல் தான் அரசியலுக்கு வரவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்

பரமக்குடியில் இன்று தனது தந்தை சீனிவாசன் சிலையை திறந்து வைத்த பின்னரே மேற்படி கருத்தை வெளிப்படுத்திய கமல் ஹாசன், மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

“நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நபர்தான் வரவேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தார். அதனை நாங்கள் உதாசீனம் செய்தோம். அதுவும் இன்று நிறைவேறி விட்டது. சுதந்திர போராட்டத்தில் நீங்கள் (அப்பா) பங்கேற்றீர்கள் என்பதற்காக இப்போது நாங்கள் அரசியலுக்கு வரவேண்டுமா? என கேட்டுள்ளேன். அதுபோல் நிலை வந்தால் என்று அவர் கேட்பார். இன்று அந்த நிலை வந்துள்ளது. நான் அரசியலுக்கு வந்துள்ளேன். போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.

நம் மாநிலத்தில் வருடந்தோறும் 61 இலட்சம் மாணவ, மாணவிகள் புதிதாக ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். நடுநிலைப்பள்ளிக்கு செல்லும்போது அவர்களின் எண்ணிக்கை 58 இலட்சமாக குறைகிறது.

10ஆம் வகுப்புக்குச் செல்லும்போது 11 இலட்சமாகவும், பட்டப்படிப்புக்கு செல்லும்போது மூன்று இலட்சமாக குறைகிறது. இதில் விடுபட்ட இளைஞர்களின் கதி என்ன? அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

துப்புரவு பணிக்கு கூட பி.எச்.டி. படித்தவர் விண்ணப்பிக்கும் நிலை வந்துள்ளது. இதற்கு காரணம் நமது இளைஞர்கள் திறனை வளர்த்துக் கெள்ளாததால் தான்.

நான் சலூன் கடையில் ஒன்றரை  மாதம் வேலை பார்த்திருக்கிறேன். அங்கு கிடைத்த பாடம் தான் பின்னாளில் நாள் வேறு தொழிலில் வளர காரணமாக இருந்தது. எந்த தொழிலும் கீழானது இல்லை.

சத்தியாக்கிரக போராட்டத்துக்கு பிறகு நம் நாட்டில் திறமை வளர்ப்பு போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். இதில் இன்னும் தமிழகம் பங்கு பெறவில்லை.
மற்ற மாநிலங்கள் இளைஞர்களுக்கு திறமை வளர்ப்பதை செயல்படுத்தி நடத்தி வருகிறது. வேலை வாய்ப்புகளை தர பல்கலைக்கழகங்கள் மட்டும் போதாது. பல தொழில்கள் கற்பதற்கு ஆள் இல்லாமல் உள்ளது. வளர்ந்த நகரத்தில் முடி திருத்தும் தொழில் செய்தால் ஒரு இலட்சம் ரூபாய் வரை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ராணுவத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட வீதிவிபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இளைஞர்களை இராணுவத்துக்கு அனுப்ப பெற்றோர்கள் முன் வர வேண்டும்” என்று கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X