2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மஹஓயாவில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி

Editorial   / 2021 நவம்பர் 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்

அம்பாறை மாவட்டத்தில் இன்று (25) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் மஹஓயா பிரதேசத்தில் ஆகக் கூடிய 83.02 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியாக பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய கண்காணிப்பாளர் எம்.ஏ.எம். அக்மல் தெரிவித்தார்.

ரூபஸ்குளத்தில் 61.05 மில்லிமீற்றர், பாணாமை பிரதேசத்தில் 56.09 மில்லிமீற்றர், லகுகல பிரதேசத்தில் 46.7 மில்லிமீற்றர், தீகவாபி பிரதேசத்தில் 45 மில்லிமீற்றர், அம்பாறை பிரதேசத்தில் 39.3 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த 03 நாள்களாக பெய்து வரும் மழையினால் அம்பாறை மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, உள் வீதிகளில் நீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி மற்றும் மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாலை வேளையில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்கின்றது. கடல் கொந்தளிப்பாக இருப்பதால் அதிகமான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் கடற்றொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நன்னீர் மீன்பிடித் தொழிலும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதுடன், அன்றாட தொழிலாளர்களின் நாளாந்த தொழில் நடவடிக்கைகளும் பாதிப்படைந்துள்ளன.

இதேவேளை, கடல் மீன்களின் விலை அதிகரித்துக் காணப்படுவதுடன், மரக்கறிகளின் விலைகளும் என்றுமில்லாதவாறு அதிகரித்துக் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .