2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வாசிகசாலை தரை மட்டம்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை திராய்க்கேணி கிராமத்தில் அரச காணியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வாசிகசாலை கட்டடம், தனி நபரால் சட்டவிரோதமாக இடிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்த கால சூழ்நிலையின் போது, பாலமுனை - திராய்க்கேணி கிராமத்திலிருந்த மக்கள் அச்சம் காரணமாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற மக்களை மீண்டும் தங்களது சொந்தக் கிராமத்தில் மீள் குடியேற்றல் திட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப்பினால் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர்.

மக்களை மீள் குடியேற்றம் செய்யும் போது, பாலமுனை திராய்க்கேணி கிராமத்தில் சந்தை, சிறுவர் பூங்கா, சுகாதார நிலையம், வாசிகசாலை என்பன நிர்மாணிக்கப்பட்டன. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலை கட்டடத்தை அங்குள்ள மக்கள் வாசிகசாலை மற்றும் பொதுத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், வாசிகசாலைக் கட்டடம், தனி நபர் சார்ந்த ஒரு சிலரால் உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககுமாறு கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல் அமானுல்லாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X