2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வு

Freelancer   / 2023 மார்ச் 27 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையின் கீழ் ‘றுஹுணு லங்கா’ நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ் ஜௌபரின் (நளீமி) ஏற்பாட்டில், இறக்காமம் வில்லு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் இருந்த நீண்டகால பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு, இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம் றஸ்ஸானால் (நளீமி) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி அஹமட் நஸில், தேசிய சமாதான பேரவையின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் அமில நுவான் மதுசங்க , தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் எம். உவைஸ் மதானி (இஸ்லாஹி) , றுஹூனு லங்காவின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட நன்னீர் மீன்பிடி சங்க  நிர்வாகங்கள் மற்றும் இரு சமுகங்களின் சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

வில்லு குளத்தை அண்டிய குடிவில், மாணிக்கமடு  பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு, மீனவர் சங்கங்களில் அங்கத்துவம் இல்லாததால் அவர்களுக்கான நன்னீர் மீன் பிடித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இதனால் நீண்ட காலமாக இரு இனங்களுக்குள் காணப்பட்ட  நன்னீர் மீன்பிடிக்குத்  தேவையான  அனுமதிப்பத்திரம் இல்லாத பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு இறக்காமம் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர் ஆகியோரால் மேற்கொண்ட முயற்சியின் பயனாக, பதிவு செய்யப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு மத்தியில் பல சுற்று பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று, கடந்த  புதன்கிழமை (22) ஆம் திகதி தமிழ் மக்களுக்கு மீனவ அங்கத்துவமும் அனுமதி பத்திரமும் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .