2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் கருத்து

Editorial   / 2022 ஜூன் 30 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் எனத் தெரிவித்துள்ள எம்.ஜி.ஆர் பேரன், அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு (அ.தி.மு.க) இரட்டைத் தலைமைதான் வேண்டும் என்றும்  வலியுறுத்தியுள்ளார்.

ராமாபுரத்தில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் வீட்டில் அவரது பேரனும் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச் செயலாளருமான ஜூனியர் எம்.ஜி.ஆர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சென்று கொண்டுள்ள நிலையில் அது சம்பந்தமாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆர் வேர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சி இது. அதன் பின்பு ஜெயலலிதாவால் காக்கப்பட்டது. ஜெயலலிதா இருக்கும் காலத்திலேயே ஓ.பன்னீர் செல்வத்தை நம்பி கட்சிப் பொறுப்பை கொடுத்தார். ஓ.பன்னீர் செல்வம் அதற்கு விஸ்வாசமாக நடந்துகொண்டார். எம்.ஜி.ஆரின் பை-லாவின் படி  தொண்டர்களால் தேர்வு செய்படுபவர்களையே அ.தி.மு.க கட்சி ஏற்றுக்கொள்ளும்.

தற்போது ஒற்றைத் தலைமை ஏன்னென தெரியவில்லை, சட்டப்படி இருவரும் கையெழுத்து போட்டால்தான் கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியும். அப்படிப் பார்த்தால் சீனியர் ஓ.பன்னீர் செல்வம்தான். அவரைதான் தலைமையை ஏற்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி விட்டுக் கொடுக்கணும். எனிலும் இரட்டைத் தலைமை இருந்தால் கட்சி இன்னும் கட்டிக் காக்கப்படும் என்றார்.

இப்போ கட்சியும் சின்னமும் ஓ.பன்னீர் செல்வத்திடம் தான் உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து தலைமை வகித்தால் கட்சி, மிகப் பெரிய சக்தி வாய்ந்த கட்சியாக அசைக்க முடியாதபடி வளரும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .