2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இந்தியா, பங்களாதேஷ் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்கள்

Editorial   / 2023 மார்ச் 19 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP) இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் ​தொன் டீசலை வழங்கும் திறன் கொண்ட எல்லை தாண்டிய பைப்லைனை இந்தியா மற்றும் வங்கதேசம்   திறந்து வைத்தன.

 இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP), பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது சக பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரால் ஒரு மெய்நிகர் விழாவின் போது சனிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது,

இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையம் 2015 ஆம் ஆண்டு முதல் பங்களாதேஷூக்கு பெட்ரோலிய பொருட்களை வழங்கி வருகிறது.

பங்களாதேஷ் தற்போது இந்தியாவில் இருந்து 60,000 முதல் 80,000 மெட்ரிக் தொன் டீசலை ரயில் மூலம் இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவுக்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது எல்லை தாண்டிய எரிசக்தி குழாய் ஆகும்.

இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயம் என்று பைப்லைனை விவரித்த மோடி, இருதரப்பு பெட்ரோலிய வர்த்தகம் 1 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது என்றார்.

"நம்பகமான மற்றும் செலவு குறைந்த டீசல் விநியோகம் விவசாயத் துறைக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். உள்ளூர் தொழில்களும் பயன்பெறும்” என்று ஹிந்தியில் பேசினார்.

 பெங்காலியில் உரையாற்றிய பங்களாதேஷ் பிரதமர் ஹசீனா, வங்கதேசத்தில் எரிசக்தி பாதுகாப்பிற்கு குழாய் மிகவும் முக்கியமானது என்றார்.

"ரஷ்யா-உக்ரேன் போரின் காரணமாக பல நாடுகள் எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ளும் நேரத்தில், இந்த குழாய் நமது மக்களுக்கு எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்," என்று அவர் கூறினார்.

" பங்களாதேஷ் அஸ்ஸாமுக்கு ஒரு நல்ல சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. அசாமின் குடியிருப்பாளர்கள் பயனடைவார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி உதவி மற்றும் "அண்டை நாடுகளுக்கு முதலில்" கொள்கையின் மிகப்பெரிய பயனாளியாக பங்களாதேஷ் உள்ளது. இந்தியாவின் சிலிகுரியில் இருந்து பங்களாதேஷத்தில் உள்ள பர்பதிபூர் வரை 132 கிலோமீற்றர் நீளமுள்ள குழாய் 377 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது.

2018 செப்டம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது, பங்களாதேஷத்துக்குள் 127 கிலோ மீற்றர் நீளம் இந்திய மானியத்துடன் கட்டப்பட்டது. பல வளரும் பொருளாதாரங்கள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த போராடும் நேரத்தில் குழாய்த்திட்டத்தின் முக்கியத்துவத்தையும் மோடி குறிப்பிட்டார்.

 "இந்த குழாய் பங்களாதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை அதிகரிப்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .