2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வேகாமம் விரைவில் விடுவிக்கப்படும்

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில், வேகாமம் 450 ஏக்கர் விவசாய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப், இன்று (27) தெரிவித்தார்.

பொத்துவில் - லாகுகல பிரதேசங்களுக்கு இடையிலான எல்லையிடல் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளும் போது, பொத்துவில் பிரதேச வேகாமம் காணிப் பிரச்சினையை முதலாவதாக தீர்த்து வைக்க வேண்டுமென வன ஜீவராசிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

வேகாமம் பகுதியில் 1956 களில் விவசாய செய்கைக்காக கொடுக்கப்பட்ட சுமார் 1,900 ஏக்கர் வரையிலான காணிகள் 2006ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் வனஜீவராசி திணைக்களத்துக்குரியதாக மாற்றப்பட்டிருந்தன.

அதன்பின்னர் இக்காணிகள் தொடர்பாக பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்தன. அக்காணிகளில் ஏறத்தாழ 450 ஏக்கர் அளவில் விடுவிக்க முடியும் என்று கடந்த காலங்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக இருந்த போது நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கூட பரிந்துரைகளை வழங்கியிருந்தன.

லாகுகல-பொத்துவில் எல்லை நிர்ணயம் குறித்து பொத்துவில் மற்றும் அம்பாறையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கமைய, வனஜீவராசிகள் அமைச்சிலிருந்து இந்த எல்லைகளை இடுவது தொடர்பாக நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

நில அளவை திணைக்களத்துக்கும் எல்லைகளை இடுவது சம்பந்தமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்பணிகள், கொவிட் தொற்றுக் காரணமாகவும் தாமதமாகின்றன.

குறித்த எல்லையிடும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது, வேகாமம் காணிப் பிரச்சினை முன்னிலைப்படுத்தி, உடனடியாக குறிப்பிட்ட 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .