2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கொரோனா சிகிச்சை நிலையம் திறப்பு

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 15 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சைக்கான விடுதிகள், இன்று (15) திறந்து வைக்கப்பட்டன.

வைத்தியசாலையின் பதில் வைத்திய பொறுப்பதிகாரி டொக்டர் எம்.எச்.கே.சனூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி சுகுணன் கலந்துகொண்டு, இவ்விடுதிகளை திறந்து வைத்தார்

சுமார் 09 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டு, கொரோனா சிகிச்சைக்கென 02 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆண், பெண் கொரோனா தோற்றாளர்களுக்கென தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ள இவ்விடுதிகளில் நோயாளிகளுக்கான 50 கட்டில்கள் மற்றும் தாதியர்களுக்கான ஓய்வறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

கல்முனை பிராந்தியத்திலுள்ள வைத்தியசாலைகளில் கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் இவ்விடுதிகள் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் எம்.வாஜித், கல்முனை பிராந்தியத் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர், சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.நியாஸ், சாய்ந்தமருது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளான டொக்டர் திருமதி சிவாசுப்ரமணியம், டொக்டர் திருமதி எஸ்.ஜே.ஜஹான் உட்பட நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X