2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளுக்கு அழைப்பு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஒலுவில் ஸஹ்வா மகளிர் அரபுக் கல்லூரிக்கு ஐந்து ஆண்டுகள் கொண்ட விதிவிட இஸ்லாமிய மற்றும் தொழில்பயிற்சி கற்கை நெறிகளுக்கு 2021/2022 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சை, கல்லூரி வளாகத்தில் நாளை மறுதினம் 13ஆம் நடைபெறவுள்ளதாக, கல்லூரியின் அதிபர் ஏ.எல். ஜலால்டீன் தெரிவித்தார்.

அல்குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் கணிதம், தமிழ் உட்பட 03 திறமைச் சித்திகளுடன் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல், 18 வயதுக்கு மேற்படாதிருத்தல் வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கற்கை நெறியை பூர்த்தி செய்பவர்களுக்கு மௌலவிய்யா சான்றிதழ் வழங்கப்படும், இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்படும் க.பொ.த உயர் தரப் பரீட்சைகளுக்கான வழிகாட்டல்கள், தையல் மற்றும் கணினி ஆகிய கற்கை நெறிகளும், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளுக்கான தேர்ச்சி வகுப்புகளும்  நடத்தப்படும்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கல்விச் சான்றிதழ்கள், க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு, வைத்திய சான்றிதழ், மாணவர் தேர்ச்சி அறிக்கை, நற்சான்றுப் பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றவற்றை நேர்கப் பரீட்சையில் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .