2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பசுமைத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நிந்தவுர் பிரதேசத்தை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஆறாயிரம் மரங்களை நடும் நிகழ்வின் ஒரு அங்கமாக 540 தென்னை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு  நிந்தவுர் அல்-அஸ்ரக் தேசிய கல்லூரியில் நடைபெற்றது.

சுற்றாடல் பிரதேச ஒருங்கிணைப்பாளர்  எம்.ரீ.நௌபல் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,
பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹஸன் அலி கலந்து கொண்டார்.  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.தௌபீக், மாவட்ட வன அதிகாரி எச்.எல்.ஏ.கமகே, பிராந்திய வன அதிகாரி எம்.ஏ.ஜாயா, நிந்தவுர் கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.அப்துல் அஸீஸ், நிந்தவுர் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா மற்றும் பாடசாலை அதிபர்கள் உட்பட பிரதேசசபை உறுப்பினர், ஊர்ப்பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X