2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

நீதிமன்ற தீர்ப்பையடுத்து கல்முனையில் ஜனாசா நல்லடக்கம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 04 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்
 
கல்முனை நீதவான் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, உரிமை கோரப்படாத ஜனாஸா ஒன்று கல்முனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
கிண்ணியா மான்சோலையை சேர்ந்த 68 வயதுடைய அப்துல் காதர் என்பவர் கடந்த 2013.07.17 புதன்கிழமை இரவு அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகயீனமுற்ற நிலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மாலை 5 மணியளவில் மரணமடைந்தார்.
 
உயிரிழந்தவரின் சடலம் உரிமை கோரப்படாத நிலையில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
 
இச் செய்தியை கல்முனையிலிருந்து பலரும் கிண்ணியாவிற்கு அறிவித்த பின்பும் அங்கிருந்து யாரும் சடலத்தை பொறுப்பேற்காத நிலையில் குறித்த வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டது.
 
இது தொடர்பாக கல்முனை பொலிஸ் மூலம் கல்முனை நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தப்பட்டதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி உடனடியாக ஜனாசாவை நல்லடக்கம் செய்யுமாறு உத்தரவிட்டார்.
 
அத்தீர்ப்பையடுத்து அரச செலவில் கல்முனை ஷெஸ்ற்றோ ஜனாசா நலன் புரி சங்கத்தின் அனுசரணையுடன் கல்முனை நூராணியா தைக்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .