2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மதுபான சாலையை மூடுமாறு செனனில் ஆர்ப்பாட்டம்: தொண்டமானும் பங்கேற்பு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், செனன் தோட்டப்பகுதியில் பிரதான வீதியிலுள்ள மதுபானசாலையை மூடுமாறு தோட்டமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால், ஹட்டன்-கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. செனன் மற்றும் வெலிஓயா ஆகிய இரு தோட்டங்களையும் சேர்ந்த சுமார் 500 பேரே இந்த எதிர்ப்பு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த மதுபானசாலை மூடுமாறு இன்றுடன் மூன்றாவது தடவையாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், இதுவரையிலும் இந்த மதுபான சாலை மூடப்படவில்லை. மதுபானசாலைக்கு அருகில் விளையாட்டு மைதானமும் பாடசாலையும் இருக்கின்றது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்த மதுபானசாலையை மூடுமாறு நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையிலும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.


இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் மத்திய மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர் கணபதி கனகராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.


குறித்த மதுபானசாலையை இன்று செவ்வாய்க்கிழமை (10) மாலையுடன் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆறுமுகன் தொண்டமான உறுதியளித்ததையடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.


இதனையடுத்து ஆர்ப்பாட்டம் பகல் 12 மணியளவில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தும் வழமைக்கு திரும்பியது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X