2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

நான்காமிடத்துக்கு முன்னேறிய அக்ஸர் பட்டேல்

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் நான்காமிடத்துக்கு இந்தியாவின் அக்ஸர் பட்டேல் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 79 ஓட்டங்களைப் பெற்றதோடு, 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தை பட்டேல் அடைந்துள்ளார்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவீந்திர ஜடேஜா, 2. இரவிச்சந்திரன் அஷ்வின், 3. ஷகிப் அல் ஹஸன், 4. அக்ஸர் பட்டேல், 5. பென் ஸ்டோக்ஸ்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட டெஸ்டில் 180 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் ஒன்பதாமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஏழாமிடத்தையடைந்துள்ளார்.

தவிர, இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்டில் 183 ஓட்டங்களைப் பெற்ற நியூசிலாந்தின் டரைல் மிற்செல், 12ஆம் இடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மர்னுஸ் லபுஷைன், 2. ஸ்டீவ் ஸ்மித், 3. ஜோ றூட், 4. பாபர் அஸாம், 5. ட்ரெவிஸ் ஹெட், 6. கேன் வில்லியம்ஸன், 7. உஸ்மான் கவாஜா, 8. டரைல் மிற்செல், 9. றிஷப் பண்ட், 10. றோஹித் ஷர்மா.

இதேவேளை, இந்தியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நேதன் லையன், ஒன்பதாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி எட்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. இரவிச்சந்திரன் அஷ்வின் 2. ஜேம்ஸ் அன்டர்சன், 3. பற் கமின்ஸ், 4. ககிஸோ றபாடா, 5. ஷகீன் ஷா அஃப்ரிடி, 6. ஒலி றொபின்ஸன், 7. ஜஸ்பிரிட் பும்ரா, 8. நேதன் லையன், 9. இரவீந்திர ஜடேஜா, 10. கைல் ஜேமிஸன்.

இந்நிலையில், பங்களாதேஷுக்கெதிரான மூன்று இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் 111 ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்தின் அணித்தலைவர் ஜொஸ் பட்லர், 12ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி பத்தாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. சூரியகுமார் யாதவ், 2. மொஹமட் றிஸ்வான், 3. பாபர் அஸாம், 4. டெவோன் கொன்வே, 5. ஏய்டன் மார்க்ரம், 6. முஹமட் வஸீம், 7. டேவிட் மலன், 8. றீலி றொஸோ, 9. ஆரோன் பின்ஞ், 10. ஜொஸ் பட்லர்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வனிடு ஹஸரங்க, 2. ரஷீட் கான், 3. ஜொஷ் ஹேசில்வூட், 4. அடில் ரஷீட், 5. தப்ரையாஸ் ஷம்சி, 6. அடம் ஸாம்பா, 7. சாம் கர்ரன், 8. அன்றிச் நொர்கியா, 9. மிற்செல் சான்ட்னெர், 10. முஜீப் உர் ரஹ்மான்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. ஹர்டிக் பாண்டியா, 3. மொஹமட் நபி, 4. வனிடு ஹஸரங்க, 5. ஜெ.ஜெ. ஸ்மிட்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .